Tirunelveli

News August 10, 2024

மலைப்பகுதிகளில் மழை குறைவு: நீர்வரத்து சரிவு

image

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.60 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.86 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 122.37 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்தானது இன்று சரிந்துள்ளது.

News August 10, 2024

கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் நாளை மாற்று வழியில் இயக்கம்

image

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக கச்சிகுடாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில்(07436) நெல்லை, மதுரை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் காட்பாடி பிரிவில் கண்ணமங்கலம் அருகே நடக்கும் தண்டவாள பணிகள் காரணமாக நாளை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் திருச்சியில் இருந்து சேலம் வழியாக காட்பாடி செல்கிறது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லாது என இன்று அறிவிக்கப்பட்டது.

News August 10, 2024

ஏழாம் திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை ஆகஸ்ட் 11 மாலை 5 மணிக்கு ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை முன்னிட்டு நால்வர் சன்னதியில் முன், ஏழாம் திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலை தாங்குகிறார்.

News August 10, 2024

நெல்லையில் 6,361 மாணவர்கள் பயன்

image

பாளை தூய சவேரியர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பொறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை சபாநாயகர் அப்பாவு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 69 கல்லூரிகளை சேர்ந்த 6,361 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

News August 9, 2024

விடியல் அரசு என்ன செய்கிறது – அதிமுக நிர்வாகி கேள்வி

image

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா இன்று (ஆக.09) திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங், அதிமுக நிர்வாகி சேலம் சண்முகம் உள்ளிட்ட 8 அரசியல் கொலைகள் ஒரே மாதத்தில் நடைபெற்றுள்ளது. விடியல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 9, 2024

நெல்லைக்கு வந்த 2853 மெட்ரிக் டன் உரம்

image

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கார்பருவ நெல் சாகுபடியை கருத்திற்கொண்டு 2853 மெட்ரிக் டன் D.A.P மற்றும் COMPLEX உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து இன்று (ஆக.09) ரயில் மூலம் திருநெல்வேலி வந்து சேர்ந்தன. இவை அந்தந்த மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்கப்படும்.

News August 9, 2024

நெல்லையில் “நம்ம ஊரு சூப்பர்” நிகழ்ச்சி – ஆட்சியர் அழைப்பு

image

“நம்ம ஊரு சூப்பர்” என்ற திட்டத்தின்கீழ் நாளை (ஆக.10) ஊரகப்பகுதிகளில் உள்ள வீடுகள் விற்பனை நிலையங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு தடை செய்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணி, கை பிரதி மற்றும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

தமிழ்ப் புதல்வன் – 6361 நெல்லைமாணவர்கள் பயன்

image

நெல்லை மாவட்டத்தில் “தமிழ்ப் புதல்வன்” என்ற முதல்வரின் கனவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 69 கல்லூரிகளைச் சேர்ந்த சேர்ந்த 6361 மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 9) வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 7058 மாணவிகள் பயனடைவதாக நெல்லையில் இன்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

நெல்லை திமுகவிற்குள் மீண்டும் உட்கட்சி பூசல்

image

நெல்லை மேயராக ராமகிருஷ்ணன் நாளை பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக நிர்வாகிகளுக்கு அப்துல் வகாப் இன்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாநகர செயலாளர் ஆகியோரிடம் இருந்து வருவதை மட்டுமே அறிவிப்பாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும் என நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

News August 9, 2024

மேயர் பதவியேற்பு – கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நாளை (ஆக.10) மேயராக காலை 10.30 மணி அளவில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்க உள்ளார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!