India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலப்பாட்டம் கிராமத்தில் தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை தட்டி கேட்ட சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த சிறுவன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்த தகவல் அறிந்த பாளை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரும் 14-ஆம் தேதி மாஞ்சோலை மக்களை சீமான் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பதவியில் இருந்த தற்போதைய பேராயர் அந்தோணி பாப்புசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது கூடுதல் பொறுப்பான பரிபாலகர் என்ற பதவிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்துவை ரோம் நகரில் உள்ள போப்பாண்டவர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். புதிய ஆயருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்ரகு தலைமையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தில் 100 கைப்பேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின்படி அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் கைப்பேசிகளை உரிய நபர்களிடம் நேரில் ஒப்படைத்தார். இவற்றின் மதிப்பு ரூபாய் 18 லட்சத்து 58 ஆயிரத்து 649 ஆகும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெறும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு டக்கரம்மாள்புரத்தில் பல்நோக்கு மிஷன் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

நெல்லை, மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை இன்று திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், சிறுவன் படுகாயம் அடைந்தார். பீர் பாட்டிலாலும் தாக்கியதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (04.11.2024) வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை மீட்பது தொடர்பான ஒத்திகை பயிற்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.4) காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 69.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் பகுதியில் 25.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. மணிமுத்தாறு, ராதாபுரம் பகுதியில் தலா 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையங்கோட்டையில் 6மி.மீ, சேரன்மகாதேவியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆறாம் தேதி நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மலேசிய நாட்டின் துணை அமைச்சர் குணசேகரனை மரியாதை நிமித்தமாக கோலாலம்பூரில் இன்று (நவம்பர் 4) சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.