India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!
பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நெல்லை மாநகர பகுதிகளில் மக்களை சந்திக்கிறார் சசிகலா. நாளை மாலை 3.30 மணிக்கு நெல்லை கொக்கரக்குளத்தில் எம்ஜிஆர் சிலை மற்றும் சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் மாநகர பகுதிகளில் மக்களை சந்திக்க இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உள்ள கனரா வங்கியின் இரண்டாவது மாடியில் அரசு பொதுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, பேங்க், ரயில்வே, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என IGNIS அகாடெமி தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில் நாளை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், செங்கோட்டையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் ரயில் தென்காசியிலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று(ஆக.12) காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்த 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.12) காலை 115.20 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.56 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 120.24 அடியாகவும் உள்ளது பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை பகுதிகளில் இன்று காலை வரை 2.6 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(ஆக.11) பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 8.82 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி பகுதியில் 21 மி.மீ., மழையும் மூலக்கரைப்பட்டியில் 20 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் பராமரிப்பு பணிகள் இந்த வாரத்தில் நடப்பதால் மதுரையிலிருந்து நெல்லை வழியாக புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இன்றும் 15ம் தேதியும் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம் புனலூர் ஆகிய இடங்களுக்கு செல்லாது. மறு மார்க்கமாக புனலூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் 13, 16ம் தேதிகளில் புனலூரில் தொடங்கி நெல்லை வரை ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திவ்ய தேசங்களில் ஒன்றாக அழைக்கப்படும் வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.11) இரவு சிறப்பு கருட சேவை நடைபெற்றது. இதில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.