Tirunelveli

News August 14, 2024

தென் மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு

image

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
ஜூன் மாதம் முதல் தற்போது வரை பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சராசரியாக 238 மி.மீ மழையும், தென்காசி மாவட்டத்தில் 200 மி.மீ மழையும்,
மதுரை மாவட்டத்தில் சராசரியாக 200 மி.மீ மழையும், விருதுநகரில் 188 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2024

சுதந்திர தின விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

image

நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் வைத்து ஆட்சியர் கொடியேற்றி அணிவகுப்பை ஏற்று விழாவில் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 13, 2024

நெல்லை பொதுக்குழு கூட்டம் அறிவித்த கலெக்டர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 15ஆம் தேதி இ-சேவை மைய கட்டிடம், சமுதாய கூடங்களில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஆக.13) தெரிவித்துள்ளார். இதில் குழுவில் வளர்ச்சி பாதைக்கு தேவையான தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

பாலக்காடு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

image

நெல்லை சந்திப்பிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை 16791/16792 தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவையை வருகிற 15ஆம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி துவக்கி வைக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் இன்று (ஆக.13)
அறிவித்துள்ளது.

News August 13, 2024

நெல்லை: சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் அரசு சார்பில் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை சரியாக 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஆட்சியர் ஏற்றி வைக்கிறார். பின்னர் காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு நற்சான்று வழங்குகிறார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

News August 13, 2024

நெல்லை அருகே மின்னல் தாக்கி பலி

image

நெல்லை களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பழம் பறிக்கச் சென்ற இளைஞர் பிரிட்டோ என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 13, 2024

சுய உதவி குழுக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடத்தும் பசுமை நிறுவனங்கள் தொழில் முனைவோர் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

மாவட்ட பகுதியில் 52 மில்லிமீட்டர் மழைப்பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு நேற்று பல்வேறு பகுதியில் மழை பெய்தது. இந்த நிலையில் திருநெல்வேலியில் 32.2 மி.மீ., பாளையங்கோட்டையில் 14.4 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.4 மி.மீ., நாலு முக்கு பகுதியில் 1 மி.மீ. என மொத்தம் மாவட்ட முழுவதும் 52 மி.மீ. மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News August 13, 2024

நெல்லையில் 1,000 போலீசார் குவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபஷ் குமார் மீனா உத்தரவின்படி 1,000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News August 13, 2024

மாஞ்சோலை மக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

image

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்தனர். அப்போது தங்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் டான் டீ மூலமாக தேயிலை நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

error: Content is protected !!