India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஏர்வாடி பாலத்தில் இன்று(ஆக.,16) அதிகாலை, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி அப்பளம்போல் நொருங்கியது. காரில் இருந்த பணகுடியை சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அம்பை சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையாவின் வீடு சென்னை அசோக் நகரில் உள்ளது. குடும்பத்துடன் அவர் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஆக.,12 ஆம் தேதி மாலை அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்குமிங்கும் சுற்றியுள்ளார். இது குறித்து அவரது மகன் இசக்கி துரை 13 ஆம் தேதி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் உரிமங்கள் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 15ம் தேதி மூடப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார். அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுதந்திர தினம் மற்றும் சனி ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2700 ரூபாய் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று(ஆக.14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக நாங்குநேரி அருகே உள்ள கொடுமுடியாது அணையில் 30 மில்லி மீட்டர் மழை, மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மில்லி மீட்டர், சேர்வாலாரில் 15 மில்லி மீட்டர், பாபநாசம் அணைப்பகுதியில் 11 மில்லி மீட்டர், நம்பியார் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று காலை 6 மணி வரை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 113.65 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.40 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 117.45 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை பகுதியில் 11 மி.மீ., மணிமுத்தாறு அணை பகுதியில் 19.8 மிமீ. மழை பதிவானது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே ஒரு புதிய குளிர்சாத ரயில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ரயில் இன்று முதல் 16ம் தேதி வரை வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.