India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று(ஜூலை 12) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 12) பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு பாளை., சாராள் தக்கர் பள்ளியில் நடக்கிறது. தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால், கடற்கரை கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பணிகளை செய்ய வேண்டும் என, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நேற்று(ஜுலை 11) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை வேளாண் இணை இயக்குநர் நேற்று(ஜூலை 11) விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கார் பருவ நெல் வாழைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் 2% காப்பீட்டு தொகை செலுத்தினால் போதுமானது. நெல் பயிருக்கு 31ம் தேதியும், வாழைக்கு செப்.16ம் தேதியும் கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு ‘14447’-ல் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், போலியாக கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி பல மோசடி செய்திகள் அதிகம் புழக்கத்தில் வருகின்றது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் உதவிக்கு மாவட்ட காவல்துறையை அணுகும்படியும் கேட்டு கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 11) விடுத்துள்ள செய்தி குறிப்பில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு வருகிற 13 ஆம் தேதி காலை 9 மணிக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், பாப்பாகுடி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாக வெளியேற்றும் முயற்சியில் தோட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மறு உத்தரவு வரும்வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 3 நாளில் 75% கருணைத் தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.
ராதாபுரம் அருகே மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நேற்று(ஜூலை 10) வெளியிட்ட செய்தி குறிப்பில், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு 8 – 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ஜூலை 25 ஆம் தேதி மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நடைபெறுகிறது. மாணவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி, சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆடி மாதம் நடைபெறும் தேர் திருவிழாவில் 3ம் நாள் நிகழ்ச்சியின்போது ரத வீதியில் பூத வாகனம் வீதி உலா நடைபெறும். ஏற்கனவே உள்ள பூத வாகனம் பழுதடைந்து விட்டதால், தற்போது புதிய பூத வாகனம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இது நேற்று(ஜூலை 10) மாலை ரதவீதியில் பூஜை செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அனு சங்கமம் மஹாலில் வைத்து நாளை (ஜூலை.11) மக்களுடன் முதல்வர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.