India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 416 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பாளை தொகுதிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, பாளை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ், நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலையில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலையில், நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் “காமராஜர்” நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு சபாநாயகர் மு. அப்பாவு இத்திட்டத்தைதுவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூலை 15) அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை இன்று (ஜூலை 14) நெல்லையில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உட்பட 360க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை எந்த விசாரணையும் இன்றி கட்டாய பணி மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரினர்.
ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை(15.7.2024) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை, நேற்று(ஜூலை 14) பேருந்தின் கிளீனர் வேல்துரை கடத்திச் சென்று சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் பேருந்தை மடக்கிப்பிடித்த போலீசார், கிளீனர் வேல்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை மையத்தை இடமாற்றம் செய்ய கோரி நெல்லை வழக்கறிஞர் சிதம்பரம் தாக்கல் செய்த பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று கருத்து தெரிவித்துள்ளது. அதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பொதுபோக்குவரத்து பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.