India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் பல இடங்களில் மழை நீடித்து நிலையில் இன்று மழை பொழிவு இல்லை. பகல் முழுவதும் மழை ஓய்ந்த நிலையில் நேற்று மாலை வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கொக்கரக்குளம் போன்ற இடங்களில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளது.

நெல்லை கோட்டாட்சியராக கண்ணா கருப்பையா பணியாற்றி வந்த நிலையில் அவர் அரியலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெல்லைக்கு புதிய கோட்டாட்சியராக சென்னை சிப்காட்டில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதியில் கடலோர மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டை மேம்படுத்த ரூபாய் 14.77 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காணொலி மூலம் நட்டி தொடங்கி வைத்தார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே என் நேரு, கலெக்டர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று மற்றும் 18ம் தேதி சனிக்கிழமை ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லை, வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுதினம் காலை 11. 25 மணிக்கும், வள்ளியூருக்கு 11.43 மணிக்கும் வந்து சேரும்.

பருவமழைகால முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவும், போர்க்கால அடிப்படையில், பணிகளை மேற்கொள்ளவும் திருநெல்வேலி மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தலைமையின் கீழ் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார். மாநகரமக்கள் எந்த நேரமும் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 84 அடி, நீர் வரத்து : 135.97 கனஅடி வெளியேற்றம் : 350 கன அடி; சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 96.98 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL; மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118, நீர் இருப்பு : 92.11 அடி, நீர் வரத்து : 201.29 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி; வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 11 அடி.

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாளை, சேரன்மகாதேவி வட்டாரங்களில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இத்த நிலையில் பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகள் மற்றும் பிற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பேருந்துகள், ரெயில்களில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.15] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

விஜயா பதியில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுமானப் பணிகளை நாளை (அக்.16) காலை 11:00 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து ராதாபுரம் ஆனந்தம் மஹாலில் நடைபெறும் காணொலி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.