India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஊத்து பகுதியில் 98 மில்லி மீட்டர் மழை, நாலுமூக்கு பகுதியில் 88 மில்லி மீட்டர் மழை, காக்காச்சி பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை, மாஞ்சோலை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், இன்று (ஜூலை 16) காலை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்தார். இதில், அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முதுமத்தான் மொழி பகுதியில், நேற்று காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்தத் திட்டத்திற்காக எந்தவொரு ஆசிரியரிடமிருந்தும் ரூ.1 கூட வாங்கவில்லை. ஏற்கனவே இருக்கும் சத்துணவு கூடம் மற்றும் சமையல் அறையில் தான் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை எமிஸ் (EMIS) இணையதளம் மூலம் வருகிற 24ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதற்கான அறிவுரைகளை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த வருகிறது. இதனால், லேசானது முதல் மிதமான மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் கூடும். எனவே, பொதுமக்கள் விளம்பர பேனர்கள், மரக்கிளைகள், மின்கம்பங்கள் அருகில் நிற்கும்போதும் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து நேற்று பிற்பகலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா். அடுத்த அறிவிப்பு வரும் வரை குளிக்கத் தடை தொடரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நெல்லையில் தற்போது நடைபெறுகிறது. மாநில அளவில் சில பாடங்களுக்கு 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக காலதாமதத்தை தவிர்க்க தினமும் ஒரு பாடத்திற்கு 300 ஆசிரியர்கள் வீதம் ஐந்து பாடத்திற்கும் மாநில அளவில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுவதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று(ஜூலை 15) நடைபெற்றது. முஸ்லிம் மகளிர் உதவும் சங்க தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு 133 முஸ்லிம் விதவைப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார். செயலாளர் செய்யது அஹமது, உதவி தலைவர்கள் கபீர்,ஷாபி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கு இடையே ஜாதி மோதல் 7 அரசு பள்ளிகளில் நடந்துள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், காவலர்கள் ஜாதி மோதலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜாதி மோதல் நடந்த ஏழு அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என 250க்கும் மேற்பட்டோரை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.