Tirunelveli

News November 18, 2024

இன்று காலை 7 மணி வரை மழை நிலவரம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.18) காலை 7 மணி வரை பதிவான மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பாசமுத்திரம் 8 மிமீ , பாபநாசம் 7 மில்லி மீட்டர், நாங்குநேரி 4 மில்லி மீட்டர், சேர்வலாறு 14 மில்லி மீட்டர் களக்காடு, கன்னடியன் அணை பகுதியில் தலா 7.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 18, 2024

நெல்லை: 10 மாதங்களில் 262 பேர் குண்டாஸில் கைது!

image

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் 70 பேர் மாநகர காவல் பகுதியிலும், 192 பேர் மாவட்ட காவல் பகுதியிலும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 18, 2024

ரயிலில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – ரயில்வே

image

ஓடும் ரயில்களில் படியில் நின்றும் தண்டவாளங்களில் நின்றும் ரயில் பெட்டியில் ஏறி நின்று உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் வீடியோ எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சமூக ஊடகங்களில் பிரபலமாக ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News November 18, 2024

நெல்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து 30 பேர் விலகல்!

image

நெல்லையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், அப்போது ஏற்பட்ட சச்சரவில் கூட்டத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேறினர். இதை தொடர்ந்து நேற்று(நவ.,17) இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ் உள்ளிட்ட 30 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்.

News November 18, 2024

நெல்லை மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

நெல்லை மாவட்டத்தில் இன்று(நவ.,18)காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணி முதல், 9,10ஆம் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பாளை கிறிஸ்துராஜா பள்ளியில் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு வ.உ.சி குருபூஜையை ஒட்டி நெல்லை மணி மண்டபத்தில் கலெக்டர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

News November 18, 2024

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,18) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நெல்லை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

News November 17, 2024

2553 மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

அமைச்சர் மா சுப்பிரமணியன் நெல்லையில் இன்று (நவ. 17) செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் 1,353 மருத்துவர் காலிப்பணியிடம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை ஏற்படும் காலிப் பணியிடங்களையும் சேர்த்து 2,553 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். இதுபோல் 2,250 செவிலியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

News November 17, 2024

வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் பெட்டிகள்

image

நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் எட்டு பெட்டியில் இருந்து 16 பெட்டியாக உயர்த்தப்பட உள்ளதாக திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நாகேந்திரன் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்த ரயிலின் இருக்கைகள் 1100 ஆக உயரும் என தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

கண்ணபிரான் உட்பட 3 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

image

தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான், இவரது கூட்டாளிகள் ராக்கி, சிவா ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.இவர்கள் தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சமூக பதற்றத்தை உருவாக்கி வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 17, 2024

முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டும் – காவல்துறை

image

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா ஆலோசனைப்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு மாநகர காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.17) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனங்களில் அளவுக்கு அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துள்ளனர்.

error: Content is protected !!