India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டம் உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மீனவ சமுதாய மக்களை கடலோரப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, வேறு இடங்களுக்கு குடிபெயர வைப்பது எப்படி தவறானதோ, அதேபோல் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு பகுதிக்கு கொண்டு செல்வது முற்றிலும் தவறானது. இதனை அரசே எடுத்து நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் செல்கிறது. மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு நெல்லை வருகிறது. 2 ஆண்டாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு உள்ளதால், இதை நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு அருணகிரி தியேட்டர் முதல் லட்சுமி மஹால் வரை, பாதாள சாக்கடை பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக, 20ஆம் தேதி முதல் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு, கோயில் வாசல், குளப்பிறை தெரு, வழியாக செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிச் சாலை தச்சநல்லூர், ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு இந்த பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி இசா கடந்த ஆண்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து பேர் கலந்துகொண்டு காவல் ஆணையர் முனைவர் மூர்த்தியிடம் மனுக்களை அளித்தனர். இந்த புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழி வகை செய்யப்படும் என காவல் ஆணையர் பொதுமக்களிடம் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் குலவணிகர்புரம் கிராமம் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 5.276 ஹெக்டேர் (13.02 ஏக்கர்) நிலப்பரப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அருங்காட்சியகம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.
அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆகஸ்ட் மாதம் நடத்தும் தட்டச்சு வணிகவியல் தேர்வுக்கான நெல்லை மண்டல மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாழையூத்து சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக், சேரன்மகாதேவி எஃப் எக்ஸ் கல்லூரி, செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக், பாவூர்சத்திரம் எம்.கே.வி. பள்ளி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில், சுமார் 10,000 பேர் தட்டச்சு தேர்வு எழுத உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமானதால், நேற்று முன்தினம் மதியம் முதல் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூலை 17) நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.