India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து 29 புதிய வழித்தடங்களுக்கு நாளை (ஜூலை 20) புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, சுபாநாயகர் அப்பாவு ஆகியோர் இதனை துவக்கி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாநகராட்சி மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஹாக்கி யூனிட் சார்பில், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை (ஜூலை 20) பள்ளிகளுக்கு இடையேயான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. 2 நாள் நடைபெறும் இந்தப் போட்டியில், 38 பள்ளி அணிகளை சேர்ந்த 648 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை நெல்லை பயிற்சி கலெக்டர் அம்பிகா ஜெயின் துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நேற்று முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், 1800ஆம் ஆண்டுகளில் பெண் கல்விக்கு வித்திட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா டக்கர் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஏமி கார் மைக்கேல் ஆகியோர் இந்தியா வந்து பல்வேறு கல்விப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என கடிதத்தில் கூறியிருந்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார். இவரது மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்ற நிலையில், மீண்டும் நேற்று அவரது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிபிசிஐடி அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விசாரணை நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் நெல்லை முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், மின் கட்டணத்தை 3வது முறையாக உயர்த்தி உள்ளதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 21ஆம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நேற்று(ஜூலை 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாட்டை நாதக நிர்வாகிகள் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்சம் ரூபாய் பினாயில் ஊழலுக்கு துணை போனதாக, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜாவை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே நேற்று(ஜூலை 18) பணி விடுவிப்பு செய்து திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கமிஷனர் தாக்கரே ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகரப்புற கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் இன்று(19ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பகல் 11 மணிக்கு இந்த கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மின் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற ‘அட்டையா பட்டயா’ விளையாட்டுப் போட்டியில், பேட்டையை அடுத்துள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தலைமை ஆசிரியை ரோகிணி வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கு மாணவர்கள் சுதாகர், சூர்யா, இசை, கார்த்தி, சுரேஷ்குமார், தரணி, விஜய் ஆகியோர் தேர்வாகியதாக உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.