India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(37). இவர் கடந்த மாதம் 4 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த ஒரு ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான whatsapp லிங்கை கிளிக் செய்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.33 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணன் நேற்று(ஆக.,25) கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த 2 வாரத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இவர் நேற்று(ஆக.,25) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். மாநகராட்சியை நல்ல முறையில் கொண்டு செல்ல மேயருக்கு அமைச்சர் அறிவுரை கூறி வாழ்த்தியதாக தகவல்.
ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் இன்று ராதாபுரம் தொகுதி பழவூர் மலை, புலிகள் காப்பாக வனமாகும் . இங்கு மணல் அள்ள டாரஸ் லாரி செல்ல வசதியாக நீர்வழிப் போக்கு ஓடைகளை அழித்து பாதை அமைத்துள்ளனர். இதற்கு அனுமதி எவ்வாறு கிடைத்தது. இது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு தெரியுமா என கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் களிமண் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களின் அனுமதியும் முறைப்படி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொன்னாகுடியில் ஸ்காட் மருத்துவ மையம் மற்றும் ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒமேகா கேன்சர் கேர் நிறுவனம் இணைந்து புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த அதி நவீன சிகிச்சை மையத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அந்நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் மோகனா வம்சி இன்று தெரிவித்தார். வெளிநாடுகளில் புற்று நோய்க்கு உள்ள அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் திருநெல்வேலி மக்களுக்கு கிடைக்கும்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 57 வகைகளில் மண்டலம், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப், அக் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டதாக கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், பொதுமக்கள் எதிர்காலத்தில் நில ஆக்கிரமிப்பு எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விஏஓவை தேட வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழ் நிலம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் இனி அனைத்து நிலங்களையும் பார்க்க இயலும் இதற்கான பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பாளை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுரு (32) என்பவர் டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என மர்ம நபர் பேசிய வார்த்தையை நம்பி ரூ.10 லட்சத்தை மர்ம நபரின் கூகுள் பேவிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான கூடுதல் பணம் செல்வகுருவிற்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வேய்ந்தான் குளத்தில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு இரைத்தேடி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. பறவைகளுக்கு மட்டுமின்றி இந்த பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் திகழ்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பறவைகள் இரைத்தேடி முகாமிட்டுள்ளன. இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் & மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற 28, 29, 3, 4, 5, 10, 11, 12 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கயுள்ளது. விவரங்களுக்கு 0462-2986989 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.