India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பத்திரிகையாளர்கள் மீது நெல்லை ஆட்சியர் விரோத போக்கை கடைபிடித்து பல்வேறு தவறான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரசு புதிய வழித்தட பேருந்துகள் துவக்க விழாவில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து செய்தி சேகரித்தனர். ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கும் செய்தித் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்க முடிவும் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று (ஜூலை 21) காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 41 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 14 மி.மீ மழை பெய்துள்ளது. நாலுமுக்கு பகுதியில 11 மி.மீ, காக்காச்சியில் 8 மி.மீ, மாஞ்சோலை மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு விரைவில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளது. எனவே, தனிநபர், சங்கம், நிறுவனங்கள் குறைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு, சட்டப்பேரவை, சென்னை என்ற முகவரிக்கு நேரடியாகவோ மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மூலமாகவோ ஆக., 5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தங்களுக்கு உள்ள குறைகள் மற்றும் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலரிடம் மனுக்களாக வழங்கலாம். மேலும் மனுக்களை துறைவாரியாக தனித்தனியாக வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம் பகுதியில் 3 மி.மீ., சேர்வலாறு பகுதியில் ஒரு மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 0.4 மி.மீ., மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலுமுக்கில் 18 மி.மீ., ஊத்தில் 15 மி.மீ., காக்காச்சியில் 10 மி.மீ., மாஞ்சோலையில் 3 மி.மீ. என மொத்தம் 50.40 மி.மீ. மழை பதிவாக இருப்பதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அம்பை அருகே மாஞ்சோலை பகுதியில் கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அவசியம் கருதியும் நாளை 21 முதல் 23 ஆம் தேதி வரை (மூன்று நாட்களுக்கு) சுற்றுலா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை தவிர்த்து வெளிநபர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்தில் செல்லக்கூடாது என வனத்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மண்டலத்தில் 47 காவல் ஆய்வாளர்களை சரக டிஐஜி பிரவேஷ்குமார் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆய்வாளர் ராஜகுமாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் சாந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. 3வது கட்ட இந்த லீக் ஆட்டங்கள் சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன. நெல்லையில் நடைபெறும் இப்போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று(ஜூலை 20) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்திலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று படிக்க அனுமதி அளிக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.