Tirunelveli

News November 22, 2024

நெல்லை: நவம்பரில் இதுவரை 146 மி.மீ மழை – கலெக்டர்

image

இன்று (நவ.22) நடைபெற்ற நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: அக்டோபர் மாதத்தில் 64.73 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவில் விட 61% குறைவாகும். நடப்பு நவம்பர் மாதத்தில் 20ஆம் தேதி வரை 146.25 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.

News November 22, 2024

பாஜக எம்எல்ஏவுடன் எஸ்.பி வேலுமணி திடீர் சந்திப்பு

image

நெல்லை மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று (நவ.22) நெல்லை வந்தார். கூட்டம் முடிந்த பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனை வேலுமணி சந்தித்து தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார். பாஜக எம்எல்ஏவை அதிமுக மூத்த நிர்வாகி சந்தித்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 22, 2024

நெல்லையில் நாளை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு

image

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்ட 24வது மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நெல்லை சந்திப்பு வானவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநகர மாவட்ட பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளையும் தெரு நாய்களையும் கட்டுப்படுத்துவது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று (நவ.22) கேட்டுக்கொள்ளப்பட்டது.

News November 22, 2024

நெல்லை மாவட்ட மழை நிலவரம் வெளியானது

image

நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில் நேற்று(நவ.21) சற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பொழிந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லையில் அதிகபட்சம் ராதாபுரம் பகுதியில் 13 மில்லி மழை மூலைக்கரைப்பட்டியில் 10 மில்லி மீட்டர் கொடுமுடியாறில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 22, 2024

நெல்லை மாவட்டத்தில் 5.14 இலட்சம் பேர் பயன்

image

பொது சுகாதார துறையின் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய மருந்து சேவைகள் ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 5.14 இலட்சம் பேர் பயனடைந்தனர் என மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

News November 22, 2024

நெல்லையில் இன்று நோ அலார்ட்; மழைக்கு வாய்ப்பு குறைவு

image

நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று காலை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று(நவ.22) நெல்லை மாவட்டத்துக்கு எந்த அலார்ட்டும் கொடுக்கப்படவில்லை. எனவே மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

News November 22, 2024

முதல்வர் மருந்தகம் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள டி. ஃபார்ம் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இருந்த நிலையில் நேற்று(நவ.21) நவ.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசத்தை நீட்டித்துஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

News November 22, 2024

தமிழகத்திலேயே அதிக மழையை பெற்ற நாலூமுக்கு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று(நவ.21) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகமான மழையாக நெல்லை மாவட்டம் நாலூமுக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. அதாவது ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை மொத்தமாக 1,112 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 22, 2024

குடும்ப அட்டை குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினைவிட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுத்துறையின் www.tnpds.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பித்து குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

நெல்லை மாநகர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு காவல் உதவி தேவைப்பட்டால் அவர்களின் தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!