India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாஞ்சோலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நேற்று புது உத்தரவிட்டுள்ளனர். அதில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டேன் டீ நிர்வாகம் எடுத்து நடத்த முடியுமா? என தமிழக அரசும் டேன் டீ நிர்வாகமும் ஆலோசித்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்கள் வெளியேற்ற விதித்த தடை உத்தரவை நீட்டித்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கான “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” என்ற நிகழ்ச்சி வரும் 29 ஆம் தேதி சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ மற்றும் இ.பி.எஃப்.ஓ உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் பகுதியில் இன்று (ஜூலை 23) பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நீர்மலா சீதாராமன் 7 ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில், நெல்லையை தனி ரயில்வே கோட்டமாக அமைத்தல்; கங்கையை போன்று தாமிரபரணியையும் சுத்தப்படுத்துதல்; கிடப்பில் போடப்பட்டுள்ள கங்கைகொண்டான் – சேரன்மகாதேவி புறவழிச்சாலை திட்டத்தை தொடங்குதல்; அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்க நெல்லை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
நெல்லை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி அமைப்பாளராக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி விஜயாபதியை சார்ந்த ஏ.ஆர் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணியை சார்ந்த நிர்வாகிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்டு 08-06-1999 அன்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை ஆட்சியரகம் முன்பு போராட்டம் நடத்தினார். தொடர்ந்து, இதில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க கோரி ஜுலை.23 அன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், ஏற்பட்ட வன்முறையில் 2 பெண், 2 வயது குழந்தை உட்பட 17 பேரை காவல்துறையினர் தாமிரபரணியில் மூழ்கடித்து கொன்றனர்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணியில் உயிர்நீத்த 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஆற்றுப்பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 23) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் வண்ணாரப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 22) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செட்டிகுளம் கிராம அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 24ஆம் தேதி 9 மணி முதல் 1 மணி வரை கதிரியக்க அவசர நிலை மற்றும் வேதியியல் தொழிற்சாலை குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. பேரிடர் மேலாண்மை ஆணையம், மீட்பு குழுவினர் இதை நடத்துவார்கள். பொதுமக்கள் இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணி செய்து வந்த தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில்ம், திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக சுங்கபுத்திரா ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
நெல்லை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 34 மதுக்கடைகளை நாளை(23.7.24) அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இப்பகுதியில் இருக்கும் மதுக்கடைகளை மூட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.