Tirunelveli

News August 30, 2024

நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

image

தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில் – தாம்பரம் இடையே நெல்லை வழியாக வாரந்திர சிறப்பு ரயில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரயில், செப்.,1, 8, 15, 22, 29 & அக்., 6, 13, 20, 27 & நவ.,3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 30, 2024

நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (ஆக.30) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தீர்க்குமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

News August 30, 2024

விநாயகர் சிலை – எஸ்பி அதிரடி உத்தரவு

image

நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஆக.29) விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் குறித்து சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. எஸ்பி சிலம்பரசன் பங்கேற்று பேசினார். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும். தகரத்தினால் கூரை அமைக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

News August 29, 2024

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் குறித்து ஆலோசனை

image

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்திட ஒருங்கிணைந்த மேலாண்மை திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக இன்று (ஆக.29) மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News August 29, 2024

நெல்லை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் தொடர்பான கோரிக்கைகள் ஆட்சேபனைகள் பெறுவதற்கான வரைவு பட்டியல் இன்று (ஆக.29) வெளியிடப்பட்டது. திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உதவி அலுவலர்களிடம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் இடம் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

நெல்லையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS முதலாண்டு கற்பதற்கு 250 இடங்கள் உள்ளன. இதில் மத்திய ஒதுக்கீட்டு இடம் போக மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுஃ பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த கல்லூரியில் சேர்வதற்கு தேர்வானவர்கள் நாளையிலிருந்து(ஆக.,30) தேதியிலிருந்து செப்.,5ஆம் தேதிக்குள் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News August 29, 2024

வேளாண் முகாமிற்கு விவசாயிகளுக்கு அழைப்பு

image

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நாளை (ஆக.30) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. முகாமில் விவசாயிகளின் சொந்த டிராக்டர் மற்றும் உபகரணங்களுக்கு உதிரி பாகங்கள் தவிர்த்து கட்டணம் இல்லாமல் இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படுகிறது என நெல்லை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மேற்பொறியாளர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஆக.,29) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி இதனை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

ஒரே நாளில் 215 வழக்குகள் பதிவு: நெல்லை சரக டிஐஜி

image

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறிய வழக்கில் 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வழக்குகளும், தென்காசியில் அதிகபட்சமாக 85 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 55 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 வழக்குகளும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News August 29, 2024

நெல்லையில் ‘PASSPORT’ சேவைகள் ரத்து!

image

பாளை., தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஆக.,30) இயங்காது. இதனால் பாஸ்போர்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முன் அனுமதியை மாற்றிக்கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்கள் அறிய மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். SHARE IT.

error: Content is protected !!