India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தற்போது “பொருநை அருங்காட்சியகம்” திறப்பதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்” என மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி அபாரமாக உள்ளது. இதன்படி, நெல்லை மண்டல அளவில் நேற்றும், நேற்று முன்தினமும் தலா 2000 மெகா வாட் என்ற அளவில் காற்றாலை மின் உற்பத்தி ஆகி உள்ளது. தமிழக அளவில் நாலாயிரம் மெகாவாட் என்ற அளவில் நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என நெல்லை மின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் இன்று ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் முன் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
மானூர் வட்டம் வாகைகுளம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் 251 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் ரூ.2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட காவலர்கள் மீது நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி திரிவேணி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 4 பேர் நான்காவது முறையாக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டதில் இன்று ஈடுபட்டுள்ளனர். எட்டு தாலுகாக்களில் 450க்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் அத்தியாவசிய பணிகள் பாதிப்படைந்த நிலையில் வெறும் 8 பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் இன்று(ஜூலை 25) உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை தொடர்ந்து இந்த தேர்தலானது வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப்பதிவானது நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. மனுவில், 96 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வரும் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது மனித உரிமை மீறல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.