Tirunelveli

News July 27, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

நெல்லை போலீசார் எச்சரிக்கை

image

பொதுமக்கள் தங்களது அவசர தேவை என்று செல்போனுக்கு வரும் லிங்க் மூலம் தங்களது விவரங்களை வழங்கி போலி கடன் செயலிகளில் லோன் வாங்குவது உங்கள் வாழ்க்கையில் ஆபத்தை விளைவிக்கும். எனவே அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் லோன் பெறாதீர்கள். ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://cybercrime.gov.in -ல் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மைய கட்டிடத்தில் விவசாயிகள், உழவர்கள், கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களின் தரங் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் (நபார்டு) ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 27, 2024

திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ இரங்கல் அறிக்கை

image

நீலகிரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதன் இன்று மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பாஜகவின் முன்னாள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதன் மறைவு மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிவு

image

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் காரையாறு அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 578.46 கன அடியாக குறைந்துள்ளது, மேலும், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி ஆகவும், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடியாக நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

News July 27, 2024

நெல்லையில் இன்று தரங் மேளா கண்காட்சி

image

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் NABARD, SFAC & ONDC ஆகியவை இணைந்து நடத்தும் தரங் மேளா கண்காட்சி இன்று(ஜூலை 27) நடைபெற உள்ளது. 10 மணிக்கு நடைபெறும் இந்த கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற உள்ளனர்.

News July 27, 2024

பண மோசடியில் ஈடுபட்ட 2வது குற்றவாளி கைது

image

நெல்லை திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த மல்லிகாவிடம் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பழவூரை சேர்ந்த கோல்டாமேரி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பியிடம் மல்லிகா புகாரளித்துள்ளார். விசாரணையில் கோல்டாமேரி 2 பேருடன் சேர்ந்து மேலும் 17 பேரிடம் ரூ.44.92 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது. வழக்கில் 2வது குற்றவாளி ரஞ்சிதை போலீசார் இன்று கைது செய்து மல்லிகாவை தேடி வருகின்றனர்.

News July 26, 2024

மாநகராட்சி மேயர் தேர்தல் அட்டவணை அறிவிப்பு

image

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முற்பகல் 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 11 மணிக்கு பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு 11.45 மணி வரை வாபஸ் பெற அவகாசம் கொடுக்கப்படும். போட்டி இருந்தால் பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை தேர்தல் நடவடிக்கை தொடங்கும். பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை ரிசல்ட் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் விடுவிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கொலை முயற்சி வழக்கில் இன்று வழக்கறிஞர் நயினார் முஹம்மதை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நெல்லையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டம் நடத்திய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கறிஞர் நயினார் முஹம்மது ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

News July 26, 2024

அமைச்சரிடம் மனு அளித்த திருநெல்வேலி எம்பி

image

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்தார். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு ரயில் சேவைகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!