India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தி்ல் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை செய்து தருவதாக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடப்பு கல்வி ஆண்டில் நெல்லை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வருகிற 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, பாடநூல், சைக்கிள், சீருடை, பஸ் பாஸ், வரைபடக் கருவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் தான் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டப்படும். அதற்கான சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அம்பை அருகே மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (24) என்பவர் நேற்று அம்பை ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், நேற்று திருநெல்வேலி மாநகர மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் செயலாளராக லெட்சுமி நாராயணனை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் புதிய செயலாளருக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது அவசர தேவை என்று செல்போனுக்கு வரும் லிங்க் மூலம் தங்களது விவரங்களை வழங்கி போலி கடன் செயலிகளில் லோன் வாங்குவது உங்கள் வாழ்க்கையில் ஆபத்தை விளைவிக்கும். எனவே அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் லோன் பெறாதீர்கள். ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது https://cybercrime.gov.in -ல் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மைய கட்டிடத்தில் விவசாயிகள், உழவர்கள், கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களின் தரங் கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் (நபார்டு) ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.