India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(ஜூலை 31) பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழையின் காரணமாக நாங்குநேரி அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தானது வினாடிக்கு 1940 கன அடியாக சரிந்துள்ளதாக இன்று காலை மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் தண்டவாளங்களில் வெள்ளம் காரணத்தால் நெல்லை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் செய்யப்பட்டது. நெல்லையிலிருந்து நேற்று முன் தினம் இரவில் புறப்பட்டு சென்ற பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டது. மறு மார்க்கமாக அம்பை வழியாக வந்த பாலக்காடு-நெல்லை எக்ஸ்பிரஸ் நேற்று ஆலுவாவில் இருந்து 6மணிக்கு புறப்பட்டு நெல்லை வந்தது.
சேரன்மகாதேவி அடுத்த வேலியார்குளத்தை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர்(52). இவரது மனைவி அன்புச்செல்வி(50). ஆசிரியையான இவரை கடந்த 18ஆம் தேதி கிறிஸ்டோபர் பள்ளியில் விடுவதற்கு பைக்கில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அன்புச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிறிஸ்டோபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் இன்று(ஜூலை 31) நெல்லை வருகை தருகிறார். மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். தொடர்ந்து நேரு கலை அறையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (ஜூலை 30) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பத்து நபர் கொண்ட குழுவாக செயல்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரையாறு சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சொரிமுத்தையனார் திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்கிக்கொள்ளலாம் என காவல்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கு யு. ஜி. சி. விதிகளின்படி தேர்வு நடைபெற உள்ளது. 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தரவுத்தாளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் சாக்கரட்டீஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 30) வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.