India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இருவர் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் நெல்லைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.7 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்து பயன் பெறலாம் என்றார்.
திருநெல்வேலி சரக காவல் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் நெல்லை சரகத்தில் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் சங்கரன்கோவிலுக்கும், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி நெல்லை சிறப்பு பிரிவுக்கும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் சேரன்மாதேவிக்கும் என 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைசார்பில் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் பங்கு பெற்று தேர்வு எழுதியவர்களில் 12 பேர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும் , மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில் எண்(06005) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு வழி சிறப்பு விரைவாக இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாகர்கோயில் சென்று சேருகிறது. இந்த ரயில் எழும்பூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் சென்று சேருகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று(ஆக.02) 9ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். காயம் அடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயநாராயணம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் வரத்து. காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.60 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.77 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 129.49 அடியாகவும் உள்ளது பாபநாசம்உள்ளது.பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1041 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் திருச்சி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சரவணன் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தமிழகத்தில் 17 திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.