India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த நிலையில், மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனையில் ராமகிருஷ்ணன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லை மேயருக்கான தேர்தல் நாளை(ஆக.05) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, நெல்லையில் உள்ள 4,88,874 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததால், புதிய மேயர் நாளை அக.5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்களில் 4அதிமுக கவுன்சிலர்களை தவிர திமுக கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. இந்நிலையில், புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து, போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி பிற்பகலில் முடிவு அறிக்கப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் யார் என நாளை நடைபெற இருக்கும் திமுக மாமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நெல்லையில் முகாமிட்டுள்ளனர். நாளை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் வைத்து நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதற்கு ஈடாக வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதில், நெல்லை மாவட்டம் பாளையில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏழு வயது பிரிவுக்குட்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி பாளை வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து இன்று(ஆக.03) நடைபெற்றது.இந்த போட்டியினை பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் செப்டம்பர் மாதம் மைசூரில் நடைபெறும் தேசியப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரத்தில் விஜயநாராயணம் கேந்திரா வித்யாலயா பள்ளி தனியார் வாகனம் இன்று காலை 8 மணியளவில் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.03) காலை நிலவரப்படி 120.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.68 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 128.57 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், மனம் ஒத்த மாறுதல் கலந்தாய்வு 6ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் மாவட்டத்திற்கும் மாவட்டத்திலிருந்து மாவட்டம் மாறுவதற்கும் நாளை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இருவர் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் நெல்லைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.