India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 14ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்டம் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் மற்றும் குடும்ப அட்டையில் கைப்பேசி எண் மாற்றுதல் போன்ற பல விஷயங்களுக்கு மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார், உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் சைபர் கிரைம் குற்றவாளிகள் “சப்ரோன் இன்வெஸ்ட்மென்ட்” மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். உலக வங்கியில் பணி செய்வதாக கூறி குங்குமப்பூ மொத்தமாக சப்ளை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி பணத்தை பறிக்கின்றனர். எனவே பொதுமக்கள் இது குறுத்து ஏமாறவேண்டாம். மேலும் 1930 புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: சைபர் கிரைம் குற்றவாளிகள் “சப்ரோன் இன்வெஸ்ட்மென்ட்” மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். உலக வங்கியில் பணி செய்வதாக கூறி குங்குமப்பூ மொத்தமாக சப்ளை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி பணத்தை பறிக்கின்றனர். எனவே நேரில் சென்று விசாரித்துக் கொள்ள வேண்டும். 1930 புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசு சார்ந்த நிறுவனங்களில் 3 மாதம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்ற முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

திருநெல்வேலி காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிவேகத்தை தவிர்த்து மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்தில் உள்ள பயணத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

சமுதாய மற்றும் வகுப்பு நல்லினத்திற்கான பேரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல் அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் awards.tn.gov.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.15 ஆகும். இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் நேற்று(டிச.10) சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்

நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன .விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இணைய விரும்பும் விவசாயிகள் இந்த மாதம் 19ம் தேதிக்குள் இணைந்து கொள்ளலாம் என்றார் .

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை(டிச.,12) மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. சொக்கப்பனை ஏற்றுவதற்காக 23 அடி உயர பிரம்மாண்ட பனை மரத்தில் பனை ஓலைகள் சொருகி சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

#நெல்லையில் இன்று(டிச.,11) காலை 10 மணிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.#காலை 7.30 மணிக்கு பாரதியார் சிலைக்கு உலக பொது சேவை நிதியம் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.#காலை 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.