India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பவுல்ராஜ் மற்றும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயராக கிட்டு (எ) ராமகிருஷணன் தேர்வாகியுள்ளார். கிட்டு (எ) ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்றார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவுல்ராஜ் மற்றும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இருவரும் போட்டியிடுகின்றனர். பரபரப்பாக பேசப்பட்டு வந்த நெல்லை மேயர் விவகாரம் இத்தேர்தலின் மூலம் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் பவுல்ராஜ் ஆகியோர் மேயர் தேர்தலுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.வேட்பு மனு வாபஸ் நேரம் முடிவடைந்த காரணத்தால் இரு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது. வாக்களிக்க கவுன்சிலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பழவூரில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியினை பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திராவிடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஆக.05) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு இன்று காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. புதிய மேயர் யார் என்பது இன்று மாலையே தெரிந்துவிடும். இதைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி வளாகத்தில் காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் போது கவுன்சிலர்கள் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை -புனலூர் எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 8ம் தேதி நெல்லை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். அதாவது அந்த ரயில் நெல்லை – புனலூர் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக 6 மற்றும் 9ம் தேதிகளில் புனலூர் – நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
தமிழக கடற் பகுதிகளில் கனமழை மற்றும் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளது. இந்நிலையில் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூத்தன்குழி உட்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை நேற்று(ஆக.05) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மருதூர் சுப்பிரமணியன், அதிமுக கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். பின்னர் நெல்லையின் அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.