India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நாளை நெல்லையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு இட்டேரி பாலாஜி கோல்டன் சிட்டி சௌபாக்கியா விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளார். இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(செப்.06) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வள்ளியூர், நாரணம்பாள்புரம், குலவனிகபுரம், சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் பெற்ற பயனாளிகள் விதிகளின்படி பணம் திருப்பி செலுத்தவில்லை. இவர்கள் நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இன்று(செப்.,7) விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் 350 விநாயகர் சிலைகள் முறைப்படி அனுமதி பெற்று முக்கிய சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலை அமைப்பு குழுவினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது பெண்ணை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்திய வழக்கில், திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 71 வயதான சின்ன முத்தையா என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று(செப்.06) தீர்ப்பளித்துள்ளது. போக்சோ பொறுப்பு நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய இந்த தீர்ப்பு விசாரணைக்கு அரசு வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.
நெல்லை டி.ஐ.ஜி அலுவலகத்தில் சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.6) நடைபெற்றது. டிஐஜி மூர்த்தி நிரூபர்களிடம் கூறும் போது, நெல்லை சரகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜாதி மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று அறிவுரை கூறி வருகின்றனர் என்றார்.
பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதால் கடந்த ஆக.19ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மீண்டும் தூத்துக்குடி பயணிகள் ரயில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று (செப்.5) அறிவித்துள்ளது.
நெல்லை ‘பிட்’ லைன் ட்ராக் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பேசஞ்சர் ரயில் 25 தினங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் முறையிலும், மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் திருச்செந்தூர் பேசஞ்சர் ரயில் வரும் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நவராத்திரி கொலு பண்டிகை முன்னிட்டு வருகின்ற 21ஆம் தேதி முதல் அக்.6ம் தேதி வரை சென்னையில் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன விருப்பமுள்ளவர்கள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று(செப்.06) காலை ரயில் மூலம் நெல்லைக்கு வருகிறார். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
இன்று(செப்.06) காலை ரயில் மூலம் நெல்லைக்கு வருகிறார். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.