India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.13) பிற்பகல் திருநெல்வேலிக்கு வருகை தந்து மழை வெள்ள பாதிப்பு பாதிப்புகளை பார்வையிட உள்ளார். இடம் பின்னர் தெரிவிக்கப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (டிச.13) எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று நெல்லை,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நடத்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் முதல்வர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

நெல்லை மாவட்டத்திற்கு இன்று(டிச.,13) அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் அதி கனமழை நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

நெல்லையில் கனமழை தொடர்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை அனைத்து மக்களுக்கும் செல்போன் மூலம் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. அதில் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 50,000 கன அடி வெள்ளம் செல்வதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என கூறியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி நாளை(டிச 14) நடைபெறும் இந்த முகாமில் குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உரிய ஆவணங்களோடு தாலுகா அலுவலகங்கள் சமர்ப்பித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.

நெல்லையில் விடிய விடிய மழை பெய்யும் நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.500 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.34 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.28 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 6656 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் மணிக்கு 6427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று(டிச.13) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் இன்று(டிச.13) தெரிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.12) இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் இன்று (டிச.12) காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் அகத்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.