Tirunelveli

News December 13, 2024

நெல்லை: இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.13) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 13, 2024

நெல்லை மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆணையம்

image

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (டிச.13) நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளது. அதில் 13.12.24 கடனாநதி-ராமநதியிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News December 13, 2024

நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்டை வானிலை மையம் விடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 21 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News December 13, 2024

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

image

நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தலுக்கு இணங்க, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த 2024 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

நல்வாழ்வு சங்க பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நல்வாழ்வு சங்கம் மூலமாக மாநகராட்சி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 69 பல்வேறு மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட நெல்லை மாவட்ட நிர்வாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (டிச.13) தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

நெல்லை: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நாளை (டிச.14) அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தற்போது  அறிவிவித்துள்ளார். நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக் கூடாது எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

News December 13, 2024

நெல்லையில் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

image

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒன்பது தாலுகாவில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி நடக்கிறது. பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அன்று காலை 9:45 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் தொடங்கி வைக்கின்றனர். இதில்  அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

News December 13, 2024

மழை நீர் தேங்க ஆக்கிரமிப்பு தான் காரணம் – அமைச்சர் பளீச்

image

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.13) அளித்த பேட்டியில், நெல்லையில் நீர் வழி ஆக்கிரமிப்புகளால் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சி ஆணையாளர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை எடுக்கும் பணியை தொடங்கிவிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

News December 13, 2024

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் அமைச்சர்

image

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.13) பிற்பகல் திருநெல்வேலிக்கு வருகை தந்து மழை வெள்ள பாதிப்பு பாதிப்புகளை பார்வையிட உள்ளார். இடம் பின்னர் தெரிவிக்கப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

News December 13, 2024

நெல்லை கலெக்டருடன் முதல்வர் கலந்துரையாடல்

image

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (டிச.13) எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று நெல்லை,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நடத்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் முதல்வர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  கேட்டறிந்தார்.

error: Content is protected !!