India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் உட்பட ஒன்பது தாலுகாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இன்று(டிச.14) காலை தேசிய மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை 9:45 மணிக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கூடுகிறது. காலை 10 மணி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. காலை மணிக்கு நெல்லை மாவட்ட மத்திய மாநில உள்ளாட்சி பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டு விழா சங்கீத சபாவில் நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்றும்(டிச.14) இரண்டாவது நாளாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை தாலுகாவில் 19 பேரும், சேரன்மாதேவி தாலுகாவில் 132 பேரும், பாளை தாலுகாவில் 9 பேர் என மாவட்ட முழுவதும் 63 ஆண்கள் 74 பெண்கள் 19 குழந்தைகள் உட்பட மொத்தம் 156 பேர் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.13) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (டிச.13) நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளது. அதில் 13.12.24 கடனாநதி-ராமநதியிலிருந்து வினாடிக்கு 22,000 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்டை வானிலை மையம் விடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 21 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தலுக்கு இணங்க, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த 2024 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் நல்வாழ்வு சங்கம் மூலமாக மாநகராட்சி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 69 பல்வேறு மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட நெல்லை மாவட்ட நிர்வாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (டிச.13) தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நாளை (டிச.14) அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தற்போது அறிவிவித்துள்ளார். நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக் கூடாது எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.