India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய மழை இன்று வரை பெய்யும் நிலையில் இன்று மாலை 4 மணி வரை 68 புகார்கள் இங்கு பதியப்பட்டன. இதில் 60 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடைசி எட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.14) இரவு முதல் நாளை காலை வரை ஆய்வு பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு அவசர காவல் தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் இன்று (டிச.14) மாலை 5:15க்கு புறப்படும் தூத்துக்குடி மைசூர் ரயில் இரவு 8.25க்கு புறப்படும். தூத்துக்குடி சென்னை பியர்ல் சிட்டி ரயில் இரவு 10க்கு புறப்படும். தூத்துக்குடி பாலக்காடு பாலருவி ரயில் தூத்துக்குடிக்கு பதில் மீலவட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.மேலும் தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று (டிச.14) மாலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசத்தில் 106 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 18 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 10.40 மி.மீ, மணிமுத்தாறில் 32.60, பாளையங்கோட்டையில் 12 மில்லி மீட்டர், நெல்லையில் 6.20 மி.மீ, அதிகபட்சமாக பாபநாசத்தில் 106மி.மீ, சேர்வலாறு அணைக்கட்டில் 53 மி.மீ என மழை பதிவாகி இருந்தது.

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதில் பொறுப்பு அலுவலராக மோட்டார் வாகன ஆய்வாளர் மோகனப் பிரியா நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று (டிச.14) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். விரைவில் வட்டார போக்குவரத்து அலுவலர் புதியதாக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் வீடியோவை இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிச.14) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.14) கூறியதாவது; நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரியார் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக வெள்ள நீரை தடுப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று(டிச.13) பெய்த மழையின் காரணமாக ஊத்து பகுதியில் 235 மில்லி மீட்டர், நான்கு மூக்கு பகுதியில் 220 மில்லி மீட்டர் ,காக்காச்சியில் 192 மில்லி மீட்டர், மாஞ்சோலையில் 179 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 1377 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, முக்கூடல் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படை முன்னெச்சரிக்கையாக களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை அணி நெல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.