Tirunelveli

News March 31, 2024

தேர்தல்: கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு

image

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு வருகிற 19ஆம் தேதி தமிழகத்தின் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் கிராம மக்கள் தங்கள் கோயில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதை கண்டித்து மக்களவை பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான பேனர்களை தங்கள் கிராமப் பகுதியில் கட்டி உள்ளனர்.

News March 31, 2024

நெல்லையில் வைரலாகும் வேட்பாளர் புகைப்படம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் 29) டவுன் சந்திப்பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கினார். அப்பொழுது சுவாமி தரிசனம் செய்த பொழுது விபூதி தட்டில் பணம் வைத்த புகைப்படம் “ஓட்டிற்கு பணம் கொடுத்தாரா நயினார்”என்ற தலைப்பில் தற்போது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

News March 31, 2024

நெல்லைக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே உள்ளன. திருநெல்வேலியில் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தினர் செய்து வருகின்றனர்.

News March 31, 2024

நெல்லை; ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் சிவசங்கர் கூலி தொழிலாளி. கடந்த சில தினமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிவசங்கர் நேற்று இரவு கல்லிடை அருகே காட்டுமன்னார்கோவில் ரயில்வே கேட் பகுதியில் செங்கோட்டை ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2024

செல்வப் பெருந்தகை பிரச்சார தேதி அறிவிப்பு

image

காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து, அவர் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் குரூஸுக்கு ஆதரவாக வருகிற 6 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

நெல்லையப்பர் கோவிலில் நாளை முக்கிய நிகழ்ச்சி

image

காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில்
கருஉருமாரி சுப்பிரமணியர் முன்பாக
“வேல் விருத்தம்
மயில் விருத்தம்”
நிகழ்ச்சி நாளை (ஏப்ரல்.1) மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
திருவுரு மாமலை
பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமை தாங்குகிறார். இதில், பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

நெல்லை: வாகன சோதனையில் துப்பாக்கி சிக்கியது

image

நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று (மார்ச்.30) போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் அனுமதி பெறாமல் வைத்திருந்த எஸ்பிபிஎல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. 

News March 31, 2024

ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் சின்னங்கள்

image

மக்களவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 30) இறுதி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் இறுதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

News March 30, 2024

வேட்பாளர் பட்டியலில் யாருக்கு எந்த இடம்?

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி 23 வேட்பாளர்கள் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்ட சின்ன மற்றும் அவரது புகைப்படத்துடன் கூடிய பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (மார்ச் 30 வெளியிட்டார். இதில் பாஜக முதல் இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடத்திலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் அதிமுக 4வது இடத்திலும் உள்ளது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் 7வது இடத்தில் உள்ளது.

News March 30, 2024

நெல்லை களத்தில் 23 வேட்பாளர்கள்!

image

நெல்லை மக்களவை தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், அதிமுக மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் ஆகியவற்றின் வேட்பாளர்கள் 5 பேர், 18 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.