Tirunelveli

News December 16, 2024

நாடு திரும்பும் 28 நெல்லை மீனவர்கள் 

image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் துபாய் கடலில் மீன் பிடித்த போது பக்ரைன் கடற்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் வேண்டுகோள் இணங்க அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நாளை இரவு அவர்கள் நாடு திரும்புவார்கள் என எம்பி ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

நெல்லை மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்

image

நெல்லை மாநகர் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் துணை மின்நிலையத்தில் நாளை(டிச.17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தியாகராஜ நகர், மகாராஜா நகர், ராஜகோபாலபுரம், தாமிரபதி காலணி, ஏ ஆர் லயன், ராஜேந்திரன் நகர் ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

நெல்லை மாவட்டத்தில் இன்றைய நிகழ்ச்சிகள் விபரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்: காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மாஞ்சோலையில் இன்று(டிச.16) காலை 9 மணி முதல் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. பாப்பாக்குடி சுப்பிரமணியபுரத்தில் பகல் 11:30 மணி முதல் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.

News December 16, 2024

நெல்லையில் இன்று பள்ளிகள் திறப்பு

image

நெல்லையில் கடந்த 3 நாட்கள் கனமழைக்கு பிறகு, இன்று(டிச.16) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சில முக்கிய அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகளில் மழைநீர் தேக்கம் குறித்த ஆய்வு பிறகே பள்ளியை தொடங்க வேண்டும், தண்ணீர் தேங்கி இருந்தால் முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்கலாம், மழைநீர் தேக்கம் இருந்தால் தலைமையாசிரியர் விடுமுறை அறிவிக்கலாம் என ஆட்சியர் உத்தரவு

News December 16, 2024

பாபநாசம் அணையிலிருந்து 400 கன அடி நீர் வெளியேற்றம்

image

நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது பரவலாக கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் அணைக்கு இன்று (டிச.15) இரவு 9 மணி நிலவரப்படி 1783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

News December 15, 2024

நெல்லையில் நாளை 10 பகுதிகளில் சிறப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமானது நாளை (டிச.16) அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, பாளையங்கோட்டை, நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ளது.

News December 15, 2024

தமிழகத்திலேயே முதல் இடத்தை பெற்ற ஊத்து

image

நெல்லையில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (டிச.15) வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திலேயே அதிகமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்துப்பகுதியில் 2016 மில்லி மீட்டர் மழை பதிவாகி முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாலுமுக்கு பகுதியில் 1812 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது.

News December 15, 2024

நெல்லையில் நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பா.?

image

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (டிச.15) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மாவட்டத்தில் மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட உள்ளன. முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 15, 2024

நெல்லை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.15) இரவு வந்து அதிகாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.

News December 15, 2024

வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக – எம்.பி

image

சேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு அரியநாயகிபுரம் கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் பலத்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று (டிச.15) நெல்லை தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!