Tirunelveli

News October 31, 2024

தீபாவளி பட்டாசு – நெல்லை ஆட்சியர் உத்தரவு

image

நெல்லை மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறும் போது, நெல்லை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம். மாசு, ஒலி ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

News October 31, 2024

நெல்லையில் இன்றைய (அக்.31) நிகழ்ச்சிகள்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.31) வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்; *நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்மன் கோவிலில் இரவு 7 மணி ஐப்பசி திருக்கல்யாணம் மூன்றாம் நாள் ஊஞ்சல் வைபவம். *காலை 10 மணி முதல் பாளையங்கோட்டை இஸ்கான் கோயிலில் மக்களே ஆரத்தி எடுக்கும் தீபாவளி தீபத் திருவிழா வழிபாடு. *அனைத்து கோயில்களிலும் தீபாவளி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் நடைபெறுகிறது.

News October 30, 2024

தீபாவளி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தீபாவளி பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடவும் மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பொதுமக்கள் இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

பேட்டையில் விவசாயி கொலை – 5 பேர் சிக்கினர்

image

திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்கையில் உள்ள மலையாளமேட்டில் நேற்று (அக்.29) இரவு நடந்த விவசாயி பரமசிவம் என்பவர் கொலையில் சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா கூறினார்.

News October 30, 2024

பல்வீர் சிங் ஏடிஎஸ்பிக்கு விரைவில் சம்மன்

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏடிஎஸ்பிஆக பணியாற்றிய பல்வீர் சிங் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வீர் சிங் ஏடிஎஸ்பிக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் இன்று (அக்.30) தகவல் வெளியிட்டுள்ளது.

News October 30, 2024

கஞ்சா புகையிலை குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

நெல்லை மாவட்ட காவல்துறையினர் நேற்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இந்த பொருட்களால் மனித உயிருக்கு தீங்கு ஏற்படுகிறது. இது குறித்து 10581 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News October 30, 2024

பாபநாசம் அணையில் 805 கன அடி நீர் திறப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று எங்கும் மழை பொழிவு இல்லாமல் வருண்ட வானிலை காணப்பட்டது. இதனிடையே, பாபநாசம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 805 கன அடி நீர் இன்று (அக்.30) திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 95 அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் வரத்து வினாடிக்கு 427 கன அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 105 அடியாக உள்ளது.

News October 30, 2024

தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து மடல் வெளியிட்ட தலைவர்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (அக்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தனது சிந்தனை மற்றும் செயல்பாடுகளை எப்போதும் சமூக நல்லிணக்கத்துடன் முன்னெடுத்துச் சென்றவர் முத்துராமலிங்கத் தேவர். அவர் முஸ்லிம்களுடனான பந்தமும் பாசமும் மிகவும் வலுவானது. ஒரு நல்ல சிந்தனையாளராக விளங்கிய அவரின் சிறந்த செயல்பாடுகளை இந்நாளில் நாம் நினைவு கூறுவோம் என தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News October 30, 2024

பிளஸ் டூ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; காவலர் கைது

image

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் கலைச்செல்வன்(35). ஏர்வாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவர் தற்போது காலை கேடிசி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு 17 வயது பிளஸ் 2 மாணவியிடம் பேசி பழகி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் நேற்று ஆனந்த் செல்வனை போலீசார் கைது செய்தனர்.

News October 30, 2024

தரமற்ற பொருட்கள் குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.29) வெளியிட்ட அறிக்கையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் மக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கும் உணவுப் பொருட்கள் தரம் இல்லை என்றால் 94440-42322 என்ற WhatsApp எண்ணில் புகார் அளிக்கலாம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.