India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவர் போட்டியிடுகிறார். மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை கடைகள் கட்டி விற்பனை செய்த CSI நிர்வாகிகளுக்கு உடந்தையாக இருந்த சிஎஸ்ஐ முன்னாள் பொருளாளர் மற்றும் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என பரபரப்பு போஸ்டர் இன்று ஒட்டப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை நேற்றைய (ஏப்.2) நிலவரப்படி 18 புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்பட்டுள்ளது.
இதில் நெல்லை தொகுதியில் 9 புகார்களும், அம்பை நாங்குநேரி தொகுதியில் தலா ஒரு புகாரும், பாளை தொகுதியில் 5 புகார்களும் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 17 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சிவிஜில் செயலின் மூலம் 90 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளையைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது வீட்டில் பொருத்தி இருந்து சிசிடிவி கேமரா திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி திசையன்விளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சேர்மதுரையின் சகோதரர் மகாராஜன் (40) என்பவரை நேற்று (ஏப்ரல் 2) கைது செய்தார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார். அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.
திருநெல்வேலி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து திருநெல்வேலி தட்சின மாற நாடார் சங்க நிர்வாகிகளிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) ஆதரவு கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், வணிகர்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசை அகற்றுவதற்கான தேர்தல் ஆகும் என்றார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) பாளை முஸ்லிம் அனாதை நிலையத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு வருகை தந்தார். அங்கு இஸ்லாமியர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இந்தியா கூட்டணி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி முக்கில் திமுக மகளிர் அணி தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வாக்கு சேகரிக்க உள்ளார். ஏற்பாடுகளை திருநெல்வேலி பாராளுமன்ற இந்தியா கூட்டணி தேர்தல் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.
நெல்லையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பாளையில் வெப்ப அளவு 99.68°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவரை அதே ஊரைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் அவதூறாக பேசி மிரட்டிய தாக்கினார். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் படி மானூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆனந்தராஜை தாக்கிய முருகனை இன்று (ஏப்ரல் 1 ) கைது செய்தார்.
Sorry, no posts matched your criteria.