India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் நேற்று(டிச.17) விடுத்துள்ள அறிக்கையில், இணையதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் UPI REQUEST MONEY FRAUD பண மோசடி அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரியாமல் உங்களுக்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாக கூறுவார்கள். இதை பொருட்படுத்த வேண்டாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது.

இருக்கன்குறை அருகே தனியார் கல்குவாரியில் இன்று(டிச.18) மாலை பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 4 பேரில் நாகர்கோவிலை சேர்ந்த அருண்குமார் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயத்துடன் ராதாபுரம், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர். இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் எழுத்தாளர்களுக்கு இன்று(டிச.18) சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்ற ஆய்வு நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இன்று (டிச.18) காலை வரை நிலவரப்படி மாஞ்சோலை, பாபநாசத்தில் 1, காக்காச்சியில் 2. நாலு முக்கில் 6, ஊத்தில் 4, களக்காட்டில் 3.20 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 17.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் இன்று(டிச.18) தெரிவித்தார்.

இருக்கன் துறை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று(டிச.18) மண் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் இந்த சரிவில் சிக்கி உள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற இருவரையும் மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும் பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவில் மைதீன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முன்னிட்டு பள்ளக்கால் புதுகுடி பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வாலிபர் விக்னேஷ் இறந்துள்ளார். அவரது உடலை நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை ஆட்டியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் இன்று(டிச.18) வலியுறுத்தினர். அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும்,வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சபடியை நீதிமன்ற உத்தரவுப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து கூட்டமைப்பு சட்டங்களின் சார்பாக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து பயோ மெடிக்கல், இறைச்சி கழிவுகளின் குப்பைகள் தென் மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை, நடுக்கல்லூர் பகுதியில் கொட்ட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் 8 நாட்களாகியும் அகற்றப்படாமல் இருந்தன. தற்போது, மாநகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடர் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நோய்த்தொற்று பரவாவல் இருக்க கழிவுகளை தரம் பிரித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் தகவல்.

*இன்று(டிச.18) காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. *மாநகர காவல் துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. *அரசு பொறியியல் கல்லூரியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நான் முதல்வன் திட்ட திறன் மற்றும் பிளேஸ்மெண்ட் செல் திறப்பு விழா நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.