Tirunelveli

News April 6, 2024

கங்கைகொண்டான்: வெடிகுண்டு சோதனை

image

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் படி போலீஸ் பாதுகாப்பு நாளுக்கு நாள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ( ஏப்ரல் 6 ) கங்கைகொண்டான் மற்றும் தாழையூத்து ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

News April 6, 2024

பாஜக வேட்பாளரின் நாளைய பிரச்சார விபரம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாளை (ஏப்.7) ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காலை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் பாஜகவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

News April 6, 2024

பாஜகவிற்கு சைவ வேளாளர் சங்கம் ஆதரவு

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.6) பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது நெல்லை சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

News April 6, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அனல் காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய நேரிட்டால், குடிநீர் எடுத்து செல்வதுடன், கண் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

News April 6, 2024

இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.6) இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பாளையங்கோட்டையில் நேற்று நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் ஒருவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் அங்கு சோதனை நடந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 6, 2024

வாக்கு கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் பிரச்சாரம்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து நெல்லை சந்திப்பு சிந்துபுந்துறை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு திறந்த ஜீப்பில் நின்றபடி இன்று காலை (ஏப்ரல் 6) வாக்குச் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் பாளை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

நெல்லை: 2 நாள் பிரச்சாரத்திற்கு அழைப்பு

image

திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.6) மற்றும் நாளை (ஏப்.7) என இரு நாட்கள் பாளை சட்டமன்ற தொகுதிகளில் பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எம்எல்ஏ அப்துல் வஹாப் நேற்று (ஏப்.5) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 5, 2024

மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை அறிக்கை!

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.5) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் தாங்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன்,லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

News April 5, 2024

பாஜக வேட்பாளர் அனல்பறக்கும் பிரச்சாரம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 5) காலை 8 மணி முதல் நாங்குநேரி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். மூன்றடைப்பு, தோட்டாக்குடி, அனைப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.