India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஆக.21) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, வருகிற ஆக.,20 முதல் அக்.,18 ஆம் தேதி வரை வீடு வீடாக நடைபெறுகிறது. எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்தில்,
சேரனமகாதேவி அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,
நேற்று(ஆக.21) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
முன்னதாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் உள்ள குற்ற பதிவேடுகள், சிசிடிவி கேமரா செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாக வேண்டாம். இங்கு முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என்று செல்போனிற்கு குறுஞ்செய்தி மூலம் வரும் லிங்கை தொட வேண்டாம். இதில் பாதிக்கப்பட்டால் http://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி சென்னைக்கு மாற்றப்பட்டு நேற்று உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 57 கல்வி மாவட்ட அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நெல்லையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு ரமா மற்றும் தேவிகா ராணி ஆகிய இருவர் இடமாற்றம் மூலம் நியமிக்கப்பட்டு இன்று(ஆக.,21) உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்களார் பட்டியல் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியில் 1810 முகவர்கள் ஈடுபடுகின்றனர். 1.1.2025 தேதியை தொகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வரைவு பட்டியல் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகிறது. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து தென்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(53), நெஞ்சு வலியால் நேற்று காலமானார். கிருஷ்ணனின் மறைவை தாங்க முடியாமல் இருந்த அவருடைய தாய் மூக்கம்மாள்(75), தங்கை மாலா(36) ஆகியோர் இன்று(ஆக.,21) காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாழையூத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 2 நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று(ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நெல்லை புளியங்குளம் பாடசாலை தெருவை சேர்ந்த வக்கீல் சரவணராஜ், உக்கிரன் கோட்டையை சேர்ந்த வக்கீல் சாம்லாவின் இருவரும் நேற்று(ஆக.,20) பாளை., ஆரோக்கியநாதபுரம் சாலையில் நின்றனர். அப்போது அங்கு வந்த கும்பல் சரவணராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. தடுக்கச் சென்ற சாம்லாவின் பாட்டிலால் தாக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணராஜ் நள்ளிரவில் உயிரிழந்தார். இடப்பிரச்னையில் கொலை என தகவல்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘’உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேரன்மகாதேவி வட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஆக.21) காலை 9.00 மணி முதல் நாளை (ஆக.22) காலை 9 மணி வரை ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வின்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த முத்துசாமி இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நெல்லைக்கு புதிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சிவகுமார் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார்.பணி மாற்றம் செய்யப்பட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துசாமிக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.