India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய முத்துசாமி பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராக பணியாற்றிய சிவகுமார் நெல்லை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் இன்று (ஆக.23) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்பு
மையத்தில் காலியாக உள்ள ஆலோசகர்/மனநலசேவகர், செவிலியர் பணிக்கு தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை <
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ‘வின்ஸென்ட் டெக்ஸ் ஷாப்பிங்’ என்ற பெயரில் இயங்கி வந்த அடகு கடையில், நேற்று(ஆக.,22) ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் & ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் நேற்று(ஆக.,22) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்கலைக்கழகத்தில் உள்ள Msc கணினி அறிவியல் படிப்பில் சேர ஒரு சில காலியிடங்கள் உள்ளன. இதற்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப கட்டணம், நுழைவு கட்டணத்துடன் ஆக.,27ஆம் தேதி மாலை 4:30 மணிக்குள் துறை தலைவரிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பிஎம்எஸ் ஐடிஐ வளாகத்தில் மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் பற்றிய இலவச விழிப்புணர்வு கருத்தாகம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ரயில்வே தேர்வு ஆலோசகர் பாண்டுரங்கன் கலந்து கொண்டு ரயில்வே தேர்வுகள் குறித்தும் தேர்வுகளுக்கு தயார் செய்து பற்றியும் ஆலோசனை வழங்குகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் 81222 -14189 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இன்று தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று புதுடில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதியிடம் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மனு வழங்கினார். அதில் மக்கள் அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது. நிலம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரியில் மாணவ மாணவர்களுக்கு என 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மகளிருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வைத்து நாளை வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் அமைக்கப்பட்டுள்ள legal aid defence counsel systemல் பணியாற்ற அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்திற்கு தபால் மூலம் அனுப்பும்படி முதன்மை நீதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
பாளை., ஆரோக்கியநாதபுரம் அருகே வழக்கறிஞர் சரவணராஜ் என்பவர் நேற்று முன்தினம்(ஆக.,20) 4 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வக்கீலை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை நேற்று பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஆக.21) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, வருகிற ஆக.,20 முதல் அக்.,18 ஆம் தேதி வரை வீடு வீடாக நடைபெறுகிறது. எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.