India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) நெல்லை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் நாளை (ஏப்ரல் 15) சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சகஸ்ர லிங்கம் சன்னதி முன் மாலை 5 மணிக்கு இந்த வழிபாடு நிகழ்ச்சி பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு சார்பில் நடைபெறுகிறது. சிவ பக்தர்கள் திரளாக பங்கேற்க திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான கூத்தங்குழி உவரி, கூட்டபனை , பெருமணல், பஞ்சல், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாளை முதல் 61 நாட்களுக்கு ( ஏப். 15 ) கடலுக்கு செல்ல மாட்டார்கள். எனவே மீன்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நெல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்.14) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்றும் தொடர்ந்து வானிலை மந்தகமாக காணப்படுவதால் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெஇந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் நரிக்குறவர் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்.14) காலை 11 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் நேற்று (ஏப்.13) அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நிர்வாகம் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை காலை 6 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெற இருககிறது . முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 5 மணிக்கு நடைபெறும் இன்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அகஸ்தியர்பட்டி மைதானத்தில் வரும் 15ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார்.தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14,15 ஆகிய 2 தேதிகளில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் எஸ்பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.