India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (நவம்பர் 1) இரவு ரோந்து காவலர்களின் விவரம், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர உதவிக்கு இந்த காவலர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் வணிக நிறுவனங்கள் உள்ள பஜார் மற்றும் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, மது குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது போன்ற செயல்களுக்காக நெல்லை மாவட்டத்தில் 40 வழக்குகளும் மாநகரில் 10 வழக்குகளும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீபாவளி நாளில் மட்டும் ரூ.28 கோடியே 59 லட்சத்து 86 ஆயிரத்து 974 ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது. இந்த பணம் வங்கியில் இன்று (நவ.1) 11 மணிக்கு செலுத்தப்பட்டது என டாஸ்மாக் மண்டல மேலாளர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட சற்று கூடுதலாக மது விற்பனையானதாகவும் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ.01) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2,033 டிரைவர், கண்டக்டர்கள், 75 டெக்னீசியன்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மதுரையில் 95, நெல்லையில் 171 டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் எம்.டி.சியில் 323 டிரைவர், கண்டக்டர், எஸ்.இ.டி.சியில் 318 டிரைவர், கண்டெக்டர்கள் நிரப்பப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) இரவு ரோந்து நியமனம் செய்யப்பட்ட காவலர்களின் பெயர் அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.31) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் தீபாவளி பண்டிகை இன்று(அக்.31) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்பான தீபாவளியை ஆனந்தமான தீபாவளி என விழிப்புணர்வுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக அனைத்து இடங்களிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறும் போது, நெல்லை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம். மாசு, ஒலி ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.31) வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்; *நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்மன் கோவிலில் இரவு 7 மணி ஐப்பசி திருக்கல்யாணம் மூன்றாம் நாள் ஊஞ்சல் வைபவம். *காலை 10 மணி முதல் பாளையங்கோட்டை இஸ்கான் கோயிலில் மக்களே ஆரத்தி எடுக்கும் தீபாவளி தீபத் திருவிழா வழிபாடு. *அனைத்து கோயில்களிலும் தீபாவளி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.