India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை எதிர்த்து வழக்கறிஞர் மகாராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஏப்.16) நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடவடிக்கை முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற 22ஆம் தேதி பகல் 11 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி முகாம் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பகல் 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஓவியம், பேச்சு கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 9047817614 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவுசெய்யலாம்.
திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட மார்க்கெட் அருகில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று (ஏப். 15) மதியம் திடீரென்று அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிணற்றில் இன்று காலை சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.14) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மாஞ்சோலையில் 3 செ.மீட்டரும், நாலுமுக்கு மற்றும் காக்காச்சி பகுதிகளில் 2 செ.மீட்டரும், கொடுமுடியாறு அணை மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜான்சிராணி பாளையங்கோட்டை பகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்த போது அவருக்கு பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் பர்கிட் மாநகரத்தில் 9ம் வகுப்பு மாணவன் சுரேஷ் ஆனந்த் வேட்பாளர் பெயர் பொறிக்கப்பட்ட மரத்தில் செய்த இரட்டை இலை சின்னத்தை கொடுத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு வேட்பாளர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.15) காலை வரை மொத்தமாக 103.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு இன்று (ஏப். 15) பிரதமர் வருவதை ஒட்டி பாதுகாப்பிற்காக நெல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் வருவதை ஒட்டி நெல்லையில் 2500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி பட்டபிள்ளை வடக்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் என்ற 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று (ஏப்ரல் 14) மதியம் வீட்டில் கம்பரசர் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து கீழே விழுந்தார். உடனே சிறுவனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.