India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையிலிருந்து நெல்லை வழியாக தென்காசிக்கு கோடைகால ரயில் அறிவிக்கப்படாதது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோடைகால சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நெல்லையில் கிளை வழித்தடங்களான குறிப்பாக சென்னை – திருநெல்வேலி – தென்காசி இடையே ரயில்கள் ஏதும் அறிவிக்கப்படாதது பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மது கடைகள் இன்று (ஏப்.17) முதல் மூன்று நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை நேற்று இரவே வாங்கிவிட்டு சென்றனர். வாக்கு பதிவு முடிந்து இனி 20ஆம் தேதிதான் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும்.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா என்பவரது மகன் இசக்கி (25). இவர் அப்பகுதியில் சலூன் கடைநடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் விவரம் குறித்து அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விநாயகா சட்ட கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஸ்காலர்ஷிப் தேர்வில் நெல்லையைச் சேர்ந்த மாணவி வினிஸ்டா 100% தேர்ச்சி பெற்று முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாணவிக்கு சட்டம் படிப்பதற்கான அனைத்து உதவிகளும் ஸ்காலர்ஷிப் மூலம் வழங்குவதற்கான ஆணைகளை கல்லூரி டீன் அனந்த பத்மநாபன் நேற்று (ஏப்ரல் 16) வண்ணாரப்பேட்டை தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவர் ரிச்சர்ட் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்.16) சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கல்குவாரி சங்க தலைவர் ரிச்சர்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் எனது வீட்டில் பணம் மற்றும் சான்றிதழ்கள் எதுவும் கைப்பற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிங்கிகுளம் கிராமத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று (ஏப். 16) தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிங்கிகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தினர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஆன்லைனில் பல்கலை. செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த எவ்வித பிரச்சனைகளும் இல்லை. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் இணையதளத்தில் பதியவில்லை என தெரியவந்துள்ளது. விடுபட்ட அந்த பாடப்பிரிவுகளை இணையதளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது பார்வையாளர் முன்னிலையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.16) காலை வரை மொத்தமாக 275.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்.16) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் பாபநாசம் பகுதியில் அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.