India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் கடந்த 16ஆம் தேதி பகுதி நேர வேலைக்காக தனது whatsapp எண்ணிற்கு வந்த தகவலை நம்பி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் அறிவுறுத்தல்படி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,17,500 அனுப்பியுள்ளார். பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று(ஆக.,27) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அபிஷேகப்பட்டி M.S.யுனிவர்சிட்டியில் நேற்று(ஆக.,27) நடைபெற்ற 4 மாவட்ட அளவிலான ‘நான் முதல்வன்’ திட்ட கருத்தரங்கில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அப்போது, “சந்திரனுக்கு விண்கலம் போனாலும் அதற்கான எரிபொருள் மற்றும் எஞ்சின் மகேந்திரகிரியில் இருந்தது செல்கிறது. தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த நெல்லை மண்டலம் முக்கிய பங்களிப்போடு திகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.
திருநெல்வேலி மாவட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் முன்பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 95140 0777 என்ற எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். கடைசி நாள் செப்.,2ஆம் தேதி ஆகும்.
நெல்லை வழியாக நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் இருந்து தினமும் பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக இரவு 11 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை எழும்பூரில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும்.
பிரதம மந்திரியின் விருதான ஐந்து முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னலமற்ற செயல்களை செய்த குழந்தைகள், வீரதீர செயல் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் தேதி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 6369101252 என்ற எண்ணிலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஆக.27) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை, மானூர் களக்காடு, நாங்குநேரி, வண்ணாரப்பேட்டை ஆகிய ஆறு இடங்களில் 28ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் அட்டவணையில் குறிப்பிட்டபடி நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர திமுக சார்பில் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். இதில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க மாநகர செயலாளர் சுப்பிரமணியன் இன்று (ஆக.27) அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(ஆக.,27) விடுத்துள்ள செய்தி குறிப்பில், ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர், பாளை., வட்டாரங்களில் ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ அமைக்கப்பட்டுள்ளன. இதில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் ஒப்பந்த பணியிடங்களுக்கு முதுகலை பட்டம் முடித்தவர்கள் 2 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. இந்நிலையில், இன்று(ஆக.,27) காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 110.15 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 117.39 அடியாகவும் உள்ளது. மழைப்பொழிவு தொடரும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2)ன் படி நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று(ஆக.,26) முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.