India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS முதலாண்டு கற்பதற்கு 250 இடங்கள் உள்ளன. இதில் மத்திய ஒதுக்கீட்டு இடம் போக மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுஃ பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த கல்லூரியில் சேர்வதற்கு தேர்வானவர்கள் நாளையிலிருந்து(ஆக.,30) தேதியிலிருந்து செப்.,5ஆம் தேதிக்குள் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நாளை (ஆக.30) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. முகாமில் விவசாயிகளின் சொந்த டிராக்டர் மற்றும் உபகரணங்களுக்கு உதிரி பாகங்கள் தவிர்த்து கட்டணம் இல்லாமல் இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படுகிறது என நெல்லை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மேற்பொறியாளர் இன்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(ஆக.,29) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி இதனை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறிய வழக்கில் 4 மாவட்டங்களில் ஒரே நாளில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வழக்குகளும், தென்காசியில் அதிகபட்சமாக 85 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 55 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 வழக்குகளும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளை., தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஆக.,30) இயங்காது. இதனால் பாஸ்போர்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முன் அனுமதியை மாற்றிக்கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்கள் அறிய மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். SHARE IT.
இன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் கலந்துகொண்டு பொதுமக்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆலோசனைப்படி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் கான்லாப்பூர் நிறுவனத்திலிருந்து 1,196 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு இன்று வந்தது. இங்கிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
தட்டச்சு தேர்வு வரும் 31 மற்றும் செப்.,1ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்லை மண்டலத்தில் தாழையூத்து சங்கர் நகர், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரி உள்ளிட்ட 4 மையங்களில் இந்த தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலை முதுநிலை பிரிவுகளில் மொத்தம் 5,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அம்பை அருகே ஊர்க்காடு கிராமத்தில 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சங்கர் என்ற மூர்த்தி மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேருக்கு தலா 25 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நெல்லை போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சுரேஷ் இன்று (ஆக.28) தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நெல்லை ரயில் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டித் தரும் திருநெல்வேலி ரயில் நிலையத்தை தலைமையிடமாக கொண்டு தனிக்கோட்டம் உருவாக்க வேண்டும். பகல் நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணிகள் இயக்க வேண்டும் என மத்திய அரசிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.