India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி புறநகர் பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என நெல்லை மாநகர காவல் துறை கமிஷனர் மூர்த்தி தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அடங்கிய, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லிக்கோட்டை நெல்லை திருத்து கிராம மக்கள், இன்று [ஏப்.19] ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். அங்குள்ள அலவந்தான்குளம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு, ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி கிடக்கிறது. தீர்க்கப்படாத குடிநீர் பிரச்சனையே, இதற்கு காரணமாகும்.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே ஆலங்குளம் தொகுதியில் 43.45 சதவீதம் ,திருநெல்வேலியில் 36.87%,அம்பாசமுத்திரத்தில் 41.03%,பாளையங்கோட்டையில் 34.32%,நான்குநேரியில் 37.79%,ராதாபுரத்தில் 36.49%வாக்குகள் பதிவாகியுள்ளன .
நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வாக்குப்பதி பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் இஞ்சி குழி கிராமத்தில் 20 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வனப்பகுதி வழியாக 20 கிலோமீட்டர் நடந்து வந்து ஏப்.19 இன்று காரையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 19) காலை சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். முன்னதாக வாக்காளர்களுடன் அவர் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்ய சென்றார். அவருடன் மதிமுக செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி சென்றார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மாவட்ட முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவை இன்று மூடி கிடந்தன. இதனால் பல வணிக நிறுவன சாலைகள் “பந்த்” போல் வெறிச்சோடி காணப்பட்டது, வாக்களிப்பவர்கள் நடமாட்டம் மட்டும் இருந்தது.
நெல்லை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி வரை நிலவரப்படி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 11.8. சதவீதமும், திருநெல்வேலியில் 6.72 சதவீதமும் அம்பாசமுத்திரத்தில் 12.13 சதவீதமும், பாளையங்கோட்டையில் 10.5 சதவீதமும், நான்குநேரியில் 9.5 சதவீதமும், ராதாபுரத்தில் 7.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கியது திருநெல்வேலி மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகேயன் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அவர் வாக்களித்ததற்காக அடையாள மை இடப்பட்டது. இது போல் பல்வேறு விஐபிகள் காலையிலேயே வாக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை பார்லிமென்ட் தொகுதியில் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை நாளிதழ் மற்றும் செய்தி தாள்களில் விளம்பரம் செய்யாத 6 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இதனை சரி செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வழக்குபதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஏப்.18) தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் பேட்டை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடி பதட்டமான வாக்குச்சாவடி என்பதால் கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முன்பாக கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.