India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வெள்ளமடத்தையடுத்த குறிப்பன்குளத்தில் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் ஆறு தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய இரு தொழிலாளிகள் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை வழியாக சென்னை நாகர்கோயில் இடையே வந்தே பாரத் புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து நெல்லை வரும் இந்த முதல் ரயிலுக்கு இன்று இரவு 8.02 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே துறை அதிகாரிகள், ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் வருகிற 3 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி மின் கோட்ட அலுவலகத்திலும், 6 ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 13-ஆம் தேதி நெல்லை கிராமப்புற மின் கோட்ட அலுவலகத்திலும், 20 ஆம் தேதி நெல்லை நகர்ப்புற மின்கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று வயநாட்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர்.
நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கூகுள் பிளே ஸ்டோரில் கிரிண்டர் என்ற செயலி உள்ளது. இந்த செயலின் மூலம் தெரியாதவர்களிடம் பழகி, பணம் மற்றும் பொருட்களை பறித்தல் தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி பகுதிகளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜா ஞான திரவியம் தலைமை வகித்தார். பீ.டி.ஓ-க்கள் மணி, சங்கர் ராம் ,பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
ராதாபுரம் வட்டம் கூட்டப்புளி மீனவ கிராமத்தில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் கட்டுமான பணி தொடக்க விழா இன்று(ஆக.,31) நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசால் தமிழகத்தில் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
திருநெல்வேலியில் நடைபெறும் ‘பெற்றோரை போற்றுவோம்’ என்ற தென்மண்டல அளவிலான மாநாட்டில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சபாநாயகர் அப்பாவும் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியின் பல்வேறு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர். கலெக்டர் கார்த்திகேயன், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் மற்றும் மாநில கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று (ஆக.31) மாவட்ட அளவில் “பெற்றோரை கொண்டாடுவோம்” மாநாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாளை காலை 8 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நேரில் செல்ல முடியாதவர்கள் இதன் மூலம் பார்த்து மகிழலாம்.
மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு, ராபர்ட் ப்ரூஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தன் மீதான குற்றவியல் வழக்குகளையும் ராபர்ட் ப்ரூஸ் மறைத்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
Sorry, no posts matched your criteria.