Tirunelveli

News September 1, 2024

தீபாவளி ரயில்: நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

image

நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மத்திய ரயில்வே அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், நெல்லை-சாளுக்கியா ரயிலை தென்காசி வரை நீட்டிக்கவும், மும்பை – மங்களூர் மற்றும் நேத்ராவதி ரயில்களை நெல்லை வரை நீட்டிக்கவும், மதுரை – சம்பர்க் கிரந்தி ரயிலை நெல்லை வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்கவும், மேலும், தீபாவளிக்கு நெல்லை-தென்காசி-சிவகாசி வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 1, 2024

பூலித் தேவன் பிறந்தநாள் விழா: நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு

image

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவன் 309வது பிறந்தநாள் விழா இன்று(செப்.01) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர், நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் மணி மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News September 1, 2024

தமுமுக மாநில தலைவர் இன்று நெல்லை வருகை

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி எதிரில் தமுமுக சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். நிகழ்வில், மாநில மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமுமுக பாளையங்கோட்டை கிளை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 1, 2024

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் நாளை திறப்பு

image

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட திட்ட முகமை அலுவலமாக செயல்பட்டு வந்த மணிமுத்தாறு வளாகம் புனரமைக்கப்பட்டு மாவட்ட பஞ்சாயத்து அலுவலமாக மாற்றப்பட்டது. இந்த பஞ்சாயத்து அலுவலகம் நாளை (செப்.2) திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 31, 2024

வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர்

image

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வெள்ளமடத்தையடுத்த குறிப்பன்குளத்தில் வெடிமருந்து தயாரிப்பு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் ஆறு தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். இதில் கண்ணன், விஜய் ஆகிய இரு தொழிலாளிகள் உயிரிழந்தனர். சிகிச்சைக்காக 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 31, 2024

வந்தே பாரத்: நெல்லையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு

image

நெல்லை வழியாக சென்னை நாகர்கோயில் இடையே வந்தே பாரத் புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து நெல்லை வரும் இந்த முதல் ரயிலுக்கு இன்று இரவு 8.02 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே துறை அதிகாரிகள், ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.

News August 31, 2024

நெல்லையில் மின்குறை தீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் வருகிற 3 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி மின் கோட்ட அலுவலகத்திலும், 6 ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 13-ஆம் தேதி நெல்லை கிராமப்புற மின் கோட்ட அலுவலகத்திலும், 20 ஆம் தேதி நெல்லை நகர்ப்புற மின்கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட நெல்லை எம்பி

image

கேரளா மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று வயநாட்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர்.

News August 31, 2024

நெல்லை சரக டிஐஜி வெளியிட்ட முக்கிய தகவல்

image

நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கூகுள் பிளே ஸ்டோரில் கிரிண்டர் என்ற செயலி உள்ளது. இந்த செயலின் மூலம் தெரியாதவர்களிடம் பழகி, பணம் மற்றும் பொருட்களை பறித்தல் தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி பகுதிகளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ரூ.1.30 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தீர்மானம்

image

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜா ஞான திரவியம் தலைமை வகித்தார். பீ.டி.ஓ-க்கள் மணி, சங்கர் ராம் ,பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

error: Content is protected !!