Tirunelveli

News December 27, 2024

நெல்லையில் TNPSC தோ்வுக்கான இலவச பயிற்சி – ஆட்சியா்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் 2025ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வுக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளது. இந்த தோ்வுக்காக, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஜன.2 ஆம் தேதி முதல் காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும். வாரந்தோறும் முழு மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். தோ்வுக்குரிய புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் உள்ளன*ஷேர்*

News December 26, 2024

போட்டி தேர்வர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அடுத்த ஆண்டு நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பயிற்சி நடைபெற உள்ளது. திறன் பெற்ற ஆசிரியர்கள், பயிற்சி அளிப்பார்கள், விருப்பமுள்ள மாணவர்கள் பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு அணுகலாம் என கூறியுள்ளார்.

News December 26, 2024

கிராம சாலைகளை சீரமைக்க ரூ.150 கோடி நிதி

image

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கிராம சாலைகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ரூ.150 கோடி நிதி ஒதுக்கி சேதமடைந்த கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இன்று நடைபெற்ற நெல்லை மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News December 26, 2024

உழவர் சந்தை உழவர்களுக்கு தர சான்று வினியோகம்

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் உழவர் சந்தையில் வேளாண்மை துணை இயக்குனர், பூவண்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண்மை துணை இயக்குனர் மேலப்பாளையம் உழவர் சந்தை விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் (FSSAI Certificat) வழங்கினார். நிகழ்வின் போது சந்தை நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான், உதவி நிர்வாக அலுவலர் ஜெயபாரதி மற்றும் உழவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

News December 26, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவி 

image

நெல்லை மாவட்ட விவசாயிகள் உற்பத்தி திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்க அரசு தானியங்கி பம்பு செட் கருவி மானிய விலையில் வழங்குகிறது. சிறு குறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை (9025732083)தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்

News December 26, 2024

1313 மெட்ரிக் டன் யூரியா நெல்லை வருகை

image

பிசானப்பருவ சாகுபடிக்காக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 350 மெட்ரிக் டன்னும் தென்காசி மாவட்டத்திற்கு 583, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 155, குமரி மாவட்டத்திற்கு 185 மெட்ரிக்டன்னும் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த உரம் கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அவசர தேவைக்காக 80 டன் திருநெல்வேலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்டத்தில் 2009ம் ஆண்டு முன்னர் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வரும் டிச.31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய இயலாது. எனவே, ஏற்கனவே பிறப்பு சான்று பெற்ற அலுவலகங்களை அணுகி பதிவு செய்யலாம் என மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார். இதுகுறித்து அறிவிப்பு மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

சிறப்பு மையங்கள் தொடர் கண்காணிப்பு

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று(டிச.25) வெளியிட்ட செய்தி குறிப்பில்: குழந்தை திருமணத்தை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அம்பை, வள்ளியூர், களக்காடு, ராதாபுரம் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

News December 26, 2024

டவுன் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

திருநெல்வேலி மாநகர் டவுன் மாதா பூங்கொடி தெரு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தனமான நேற்று(டிச.25) நள்ளிரவு சில நபர்கள் மது போதையில் மது பாட்டிலில் தீ வைத்து சுவற்றில் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று வந்த பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2024

இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விபரம் வெளியீடு 

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.25) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்  இரவு நேரத்தில் உதவிகள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!