India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் தண்டவாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் இன்று(செப்.,3) ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை வழியாக குமரி செல்ல வேண்டிய கவுரா ரயிலும் ரத்தானது. SHARE IT.
பாளையங்கோட்டை நான்கு வழி சாலை, ரெட்டியார்பட்டி அருகே இன்று(செப்.,3) அதிகாலை வேகமாக சென்ற காருடன் மற்றொரு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்காள், தம்பி இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த பாளை., தீயணைப்பு மீட்பு படையினர் & போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நடப்பு நிதியாண்டிற்கான ஆய்வு நிகழ்ச்சிக்காக நெல்லைக்கு செப்.,4ஆம் தேதி வருகை தர உள்ளனர். வேளாண் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் திட்ட செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து கள ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று பணகுடி முருகன் (35), வள்ளியூர் அஜித்குமார் (24) ஆ.திருமலாபுரம் ராமகிருஷ்ணன் (34) தேவர் குளம் ஆனந்தராஜ் (45) சீவலப்பேரி முத்துராஜா (20) ஆகியோர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் எஸ் பி சிலம்பரசன் பரிந்துரையின் படி கலெக்டர் உத்தரவை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவர் கிராமமான கூந்தங்குழியில் இன்று அஜித் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
திருநெல்வேலி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருநெல்வேலி மாநகர் குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்குள் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கல்வெட்டுகளை நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவிகள் மீனா, சுகன்யா, பாரதி, ராணா ஆகியோர் படிவம் எடுத்து ஆய்வு செய்தனர். இதில் 950 ஆண்டு பழமையான கோயில் என தெரியவந்துள்ளது. கருவறை 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் வெள்ளம் வெள்ளத்தில் இக்கோயில் மூழ்கினாலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்தார். அப்பொழுது வருகின்ற 10ஆம் தேதிக்குள் திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறித்த கவன ஈர்ப்பு மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது ஊத்து எஸ்டேட் பிரதீஷ், ஊத்து பால்சாமி, வழக்கறிஞர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 8 சிறப்பு கவுண்டர்களில் குறைகள் வாரியாக மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். மேலும் பொது நிவாரண நிதியிலிருந்து பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாநகரத்தின் கிழக்கு காவல் துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று(செப்.,2) ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் புதிய துணை ஆணையாளர் விஜயகுமாருக்கு சக காவலர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது காவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.