India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்க கல்வித் துறையில் லிசி, கித்தேரி, உஷா மாலதி, ஜூடி ஆகிய நான்கு பேருக்கும், பள்ளிக் கல்வித் துறையில் லலிதா ரமோணா, ஸ்ரீரேணுகா, லீமா ரோஸ், சாந்தி ஆகிய நான்கு பேருக்கும் நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் இன்று (செப்.3) தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதன் காரணமாக வரும் 7ம் தேதி நெல்லை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் நெல்லையிலிருந்து அதிகாலை புறப்பட்டு செல்ல வேண்டிய புருலியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் பணியாற்றும் 9 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குழந்தை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி காத்திருப்போர் பட்டியலுக்கும், நெல்லை சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் கொல்லங்கோடு ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை அரசு பெண்கள் பள்ளியில் படித்து இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 6 மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்குவதற்காக நடிகர் தாடி பாலாஜி நாளை (செப்.4) கல்லணை பள்ளிக்கு வருகிறார். காலை 11 மணியளவில் கல்லணை பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நெல்லை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து இரவு 06.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இதற்கு முன்பதிவு நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களை பெற்ற மாணவர்கள் தங்களுக்குரிய கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 85 பேர் சேர்ந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாய்ப்பு பெற்றவர்கள் 5ஆம் தேதிக்குள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செப் (4) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நாளை(செப்.04) இரவு 10.20 மணிக்கு (06040) தாம்பரம் சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில், நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு செய்யும் பொதுக்குழு கூட்டம் செப்.19ஆம் தேதி காலை 11 மணிக்கு வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து ஆயுள்கால உறுப்பினர்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்றறிக்கையுடன் தவறாமல் ஆஜராக வேண்டும்.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆக., மாதம் 109 கடை மற்றும் நிறுவனங்களில் எடை அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 நிறுவனங்கள் விதி மீறியது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.